குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினவிழா

09.06.2023 அன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா எம்.எம்.எஸ்.எஸ்.எஸ். வரவேற்பு மையத்தில் கொண்டாடப்பட்டது. இறைவணக்கப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. யோகா ஆசிரியர் திருமிகு.தனலட்சுமி வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் சங்க செயலர் அருட்பணி கபிரியேல், சங்க நிர்வாக அலுவலர் திருமிகு.மோரிஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு திருமிகு.முனியசாமி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் திருமிகு.ராஜகோபால், இல்லப் பொறுப்பாளர் திருமிகு.ஜஸ்டின், இல்லப் பணியாளர்கள் மற்றும் இல்ல குழந்தைகள் பங்கேற்றனர். இல்ல குழந்தைகள் நடனம், பாடல், கவிதை, பேச்சு போட்டி போன்ற நிகழ்ச்சிகளை வழங்கினர். DCPO அலுவலர் திருமிகு.முனியசாமி குழந்தை தொழிலாளர் முறை பற்றியும் அதை ஒழிக்கும் முறைப் பற்றியும் கருத்துரை வழங்கினார். ஊறுஊ உறுப்பினர் திருமிகு.ராஜகோபால் குழந்தைகளுக்கு நல்ல கருத்துக்களையும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பது பற்றியும் சிறப்புரையாற்றினார். சங்க செயலர் அருட்பணி கபிரியேல் நாம் நம் வீடுகளிலே குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தால் சமுதாயத்திலும் ஒழித்து விடலாம் என்ற கருத்தை முன்வைத்தார். திருமிகு.ஜெனித் பாத்திமா நன்றியுரை வழங்கினார்.