கல்வி வளர்ச்சி நாள்

கல்வி வளர்ச்சி நாள்

நாள் : 18.7.2022

இடம் : R. C. மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்

நேரம்: காலை 11.30 மணி

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சங்கச் செயலர் அருட்தந்தை. ஞா. கபிரியேல் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று விழாவின் நோக்கம் மற்றும் சங்கச் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக இவ்விழாவானது கொண்டாடப்படுகிறது என்பதனையும் சுட்டிக் காட்டினார். ‘சிறந்த தலைவர் காமராஜா”; மற்றும் ‘கல்விச் சுரங்கம்” என்ற தலைப்புகளில் அனல்பறக்கும் சொற்பொழிவுகள் நடந்தேறின. பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் கல்விக்காக மேற்க்கொண்ட செயல்பாடுகள் பற்றிய நாடகமும் நடைபெற்றது.


சமூக விழிகள் இதழ் வெளியீடு

சமூக நீதி காக்கும் நோக்கோடு மூன்று மாதத்திற்கு ஒருமுறை ‘சமூகவிழிகள்” எனும் சிற்றேடு சங்கத்திலிருந்து வெளியிடப்படுகிறது.

  • விருதுநகர் மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் திருமிகு. மீனாட்சி அவர்கள் இதழை வெளியிட முதல் பிரதியினை விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு. ஞானகௌரி அவர்களும், இராண்டாவது பிரதியினை விருதுநகர் மாவட்டத் துணைக் காவல்கணக் hணிப்பாளர் திருமிகு. அர்ச்சனா தேவி அவர்களும பெற்றுக் ; கொண்டனர்.
  • விருதுநகர் மாவட்ட சைல்டு லைன் (Child Line) ஒருங்கிணைப்பாளர் திருமிகு. முருகன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு சைல்டு லைன்-1098 பற்றியும் மாணவர்களின் நல்லொழுக்கம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்.


மரக்கன்று நடும் விழா

    இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் எண்ணத்தை இளம் மாணவர்களின் மனததில் ; பதியவைக்கும் நோக்கோடு, மாணவ, மாணவிகளுக்கு வேம்பு, புங்கை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


பரிசு & கல்வி உதவித்தொகை வழங்குதல்

    “கல்வியால் பரவும் நாகரீகம்” மற்றும் “ஐயமே அறிவின் திறவுகோல்” என்ற தலைப்புகளில் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுத் தொகையும், பஙகேற்றவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு. ஞான கௌரி அவர்கள் 9,10ம் வகுப்புகளிலிருந்து போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழம் வழங்கப்பட்டது.

    மாவட்டத் துணைக் காவல்கணக் hணிப்பாளர் திருமிகு. அர்ச்சனா தேவி அவர்கள் 11, 12 ஆம் வகுப்புகளில் வெற்றி பெற்ற மாணவாக் ளுக்குப் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


விழிப்புணர்வு நடனம்

    “வீரப்பெண்ணே எழுந்து வா…” என்ற விழிப்புணர்வுப் பாடலுக்கு பள்ளி மாணவியர் நடனமாடி எழுச்சியூட்டினர்.


சிறப்புரை : 1

     முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு. ஞான கௌரி அவர்கள், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், குழந்தைகளின் நல்லொழுக்கம் குறித்தும் உரையாற்றினார்.


சிறப்புரை : 2

    மாவட்டத் துணைக் காவல்கண்காணிப்பாளர் திருமிகு. அhச் ;சனா தேவி அவர்கள் கல்வி வளர்ச்சி நாள் பற்றியும், சைல்டு லைன் – 1098 பற்றியும,; குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு பற்றியும், அலைபேசியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினாh.;


நன்றியுரை

    R.C மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு. பாக்கியராணி அவர்கள் நிகழ்சச் pயில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார். நாட்டுப்பண் நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது


நிகழ்ச்சித் தொகுப்பு:திருமிகு. சிவதேவி – ஆசிரியர், R.C மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்

அருட்தந்தை ஞா. கபிரியேல் – செயலர் & பொருளர்

அருட்தந்தை ஆ. ஸ்டாலின், – துணைச்செயலர்

திருமிகு. அ. மோரிஸ் – நிர்வாக அலுவலர்

திருமிகு. தே. ஜஸ்டின் – முதன்மை ஒருங்கிணைப்பாளர்

திருமிகு. ச. மரிய வில்லியம் – திட்ட ஒருங்கிணைப்பாளர்

திருமிகு. அ. ரா. விஜயகுமார் – விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்


அறிக்கை தொகுப்பு :திருமிகு. விஜயகுமார், விருதுநகர் மாவடட் ஒருங்கிணைப்பாளர்