Charity that challenged the covid-19

The deadly spread of covid-19 and its variants had eroded the well-being of the entire world. Educational, Economic, social activities were paralyzed to the core.

This treacherous pandemic has mercilessly swallowed up the lives and livelihoods. People were suffocated without having time to breath in between the waves of the virus.

The poor and the Oppressed were the prime victims of this pandemic.

An appropriately equipped empowered and protected social service workforce was essential to mitigate the devastating effects of the covid-19 pandemic.

MMSSS, an organization which always stands with the people on the edge to attain social equality, sprang up to identify itself with the needy at this hour of turmoil.

The impact of the pandemic was overshadowing all the humanitarian efforts of MMSSS and rehabilitation of the affected people became the biggest challenge.

When MMSSS was desperately searching for helping organizations, the Archdiocese of köln came forward to support our initiatives with the financial assistance. The Charity showered by the Archdiocese of köln in Germany was carefully channelized by MMSSS and it ensured the proper and utility usage of the support given.M/p>

The beneficiaries were scrutinized sincerely and they were provided with a package with the following provisions as immediate relief material (Rice 10kg, Moong dal 1kg, Channa 1kg, Door dal 1kg, Pappad 1pckt, Rava 1/2kg, Wheat flour 1kg, Tea powder 100gm.)

Beneficiaries:
  1. Sanitary workers from ward nos: 19, 20, 21 and 22 are more than 1000 of them from 250 families.
  2. Nomadic tribes from Sathyamoorthy Nagar – 100 families.
  3. Narikuravars(Gypsies), boom boom mattukarars(Bull nodding masters), snake charmers, and fortune tellers etc. all from Sakkimangalam – 150 families.
  4. 40 Staff members at Madurai Multipurpose Social Service Society.
  5. 55 workers at Archbishop’s House in Madurai.
  6. The efficient women self help groups were identified and selected from the regions of Theni, Uthamapalayam, Kodaikanal, Batlagundu and Aruppukottai 900 families benefited.
  7. 20 Transgender from Ulaganeri, Madichiyam ana B.B.kulam.
We thankfully acknowledge the benefactors from the Archdiocese of Köln for their generous contributions and the Archdiocese of Köln for joining hands with MMSSS.
கோவிட் துயர்துடைக்க உதவிய கோலோன் மறைமாவட்டம்

கொரணாவின் கொடிய பிடிகளில் இந்த உலகமே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழந்து மனித இனம் மருட்சியில் வாடுகிறது. இயக்கங்கள் நின்று போய் இயல்பு வாழ்க்கை பறிபோனது. இந்நிலையில், இன்னலுற்ற மனிதருக்கு உடனடியாக ஏதாவது உதவி செய்து உயிர்களை காப்பாற்றுவது மிகப்பெரும் சவாலாக உருவெடுத்தது.

மதுரை பலநோக்கு சமூக சேவா சங்கம்(MMSSS) ஒடுக்கப்பட்டோருடன் ஒன்றிணைந்து சமூக சமத்துவம் காணும் தனது பணியில் இந்த மாபெரும் சவாலை முறியடிக்க தன் சேவைகளை முன்னெடுத்தது. மிகவும் பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முனைப்புடன் களமிறங்கியது. உணவுப்பொருட்கள் தான் உடனடியான தேவை என உணர்ந்த போது இதற்கு உதவி செய்யக்கூடிய நல்ல இதயங்களையும் நிறுவனங்களையும் தேடியது.

ஜெர்மன் நாட்டின் கோலோன் உயர்மறைமாவட்டம் இந்த உயரிய பணியில் தன்னை பங்குதாரராக இணைத்துக் கொண்டு நிதி உதவியை தாராளமாக வழங்கியது. மக்களுக்கு உடனடி தேவையான அரிசி 10கி, துவரம் பருப்பு 1கி, சுண்டல் 1கி, பாசிப் பருப்பு 1கி, அப்பளம் 1பாக்கெட், ரவா 1/2கி, கோதுமை மாவு 1கி, டீத்தூள் 100 கிராம் ஆகியவை அடங்கிய தொகுப்புகளை தேவைகளின் முன்னுரிமையை நன்கு அறிந்து ஆராய்ந்து அதன்படி கீழ்க்கண்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

பயனாளிகள்:
  1. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் – மதுரை வார்டுகள் 19, 20, 21 மற்றும் 22 250 குடும்பங்களின் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்ப உறுப்பினர்கள்.
  2. சத்தியமூர்த்தி – நகர் நாடோடி பூர்வகுடி மக்கள்
  3. நரிக்குறவர், பூம்பூம் மாட்டுக்காரர், சாட்டை அடிப்பவர், பாம்பு பிடிப்பவர், குறிசொல்பவர் மற்றும் பூர்வ குடிமக்கள் – சக்கிமங்கலம்
  4. சிறிய சபை போதகர்கலால் அடையாளம் காணப்பட்ட மதுரையை ஒட்டிய கிராமங்களில் இருந்து விளிம்புநிலை மக்கள் மற்றும் மிக நலிந்த சமூகத்தினர்.
  5. மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்க பணியாளர்கள்.
  6. மதுரை உயர்மறைமாவட்டத்தின் பணியாளர்கள்.
  7. சுய உதவிக் குழுக்களின் 20 திருநங்கை உறுப்பினர்கள்.
நன்றி! தாராள நிதி உதவியினை மனமுவந்து நல்கிய கோலோன் உயர்மறைமாவட்டத்திற்கும் அம்மறைமாவட்டத்தின் கொடையாளர்களுக்கும் எங்கள் இதயம் நிறைந்த நன்றி!