சின்னமனூர் பென்னிகுக் மகளிர் குழு தலைவி விஜய ஜோதி அவர்களின் தலைமையில் சின்னமனூர் கத்தோலிக்க மகாசவை அரங்கில் மார்ச் 8 ல் தேனி மகளிர் தினிவிழா கொண்டாடப்பட்டது.
சமுதாய ஒருங்கிணைப்பாளர் திருமிகு செல்வி அவர்கள் மகளிர் தினத்தின் வரலாற்று பின்னணியோடு வரவேற்புரை அளித்தார். பாளையம், ஒளிச்சுடர் மகளிர் குழு பொறுப்பாளர்களால் விழிப்புணர்வு பாடல் பாடப்பட்டது, அதனை தொடர்ந்து செயலர் தந்தை பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பெண்கள் தினம் அமைய வேண்டுமென்று சிறப்புரையாற்றினார். T. சிந்தலைசேரி மாரியம்மன் குழு தலைவி மாலா அவர்கள் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்கள் பற்றி உரையாற்றினார். கால்கள் இல்லாமலும் எவரஸ்ட் ஏறலாம் என்ற நம்பிக்கை உரையாற்றினார். இவ்விழாவின் தலைமை திருமிகு. ஜெயஜோதி சமுதாய ஒருங்கணைப்பாளா, திருமிகு. மகேஸ்வரி அவர்கள் பெண் குழந்தையின் ஏக்கங்கள் நிறைந்த பாடல் ஒன்றை பாடினார். நிர்வாக அதிகாரி மோரிஸ் அவர்கள் பெண்கள் தலைநிமிர்ந்து நடைபோட வேண்டும் என்று தனது கருத்தையும் பகிர்ந்து கொண்டார். வழக்கறிஞர் ஜீவா அவர்கள் பெண்களுக்கான சட்டங்கள் பற்றி விளக்கினார். T. சிந்தலைசேரி புனித மீட்பர் குழு தலைவி பிரிட்டோ மேரி அவர்கள் பெண்ணின் துயரங்கள் பற்றி கதை ஒன்றை கூறினார். திருமிகு. கீதா அவர்கள் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவின் நினைவு பரிசாக “பெண் ஏன் அடிமையானாள்” என்ற புத்தகம் வழங்கப்பட்டது. நிறைவாக அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.