மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் பெண்கள் தின விழா கொண்டாட்டம்

மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் பெண்கள் தின விழா கொண்டாட்டம்

08.03.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் அருப்புக்கோட்டை வட்டார பெண்கள் தின விழா கொண்டாட்டமானது “பெண் விடுதலையில் இன்றைய புதுமை தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் காலை 11:15 மணிக்கு ஊராட்சிய ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் 95 பெண்கள் பங்குபெற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழாவானது தொடங்கப்பட்டது. திருமிகு.பொருட்செல்வி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவரையும் வரவேற்றார். விழாவானது திருமிகு.சூரியகலா, வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பெண்கள் சுயசார்படைவது பற்றி கருத்துரை வழங்கினார். திருமிகு.சந்தனமாரி, சமூக நலஅலுவலர் பெண்களுக்கான அரசு நலத்திட்டங்களை பற்றி விளக்கமளித்தார். திருமிகு.ராணி மீனாட்சி, எவிடன்ஸ் ஒருங்கிணைப்பாளர் பெண்கள் சமூக உரிமை பற்றியும், ஆண்களும் பெண்களும் சமம் என்று பாலின சமத்துவம் பற்றியும் கருத்துரையாற்றினார். திருமிகு.உமா மகேஸ்வரி, ஜனநாய மாதர் சங்க மாவட்ட செயலாளர் பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றியும், பெண்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்றும் கருத்துரை வழங்கினார். திருமிகு.தனலட்சுமி, திருமிகு கோமாதேவி, திருமிகு.விஜயலட்சுமி சுய உதவிக் குழுவில் இணைந்ததன் மூலம் அடைந்த பொருளாதார முன்னேற்றம் பற்றியும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அருட்தந்தை.இராஜன், உதவி செயலர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் கூறி, பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வர வேண்டுமென்று கருத்துரை வழங்கினார். திருமிகு.ஞானம், பணியாளர் வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நாட்டுப்பண் பாடலுடன் விழா நிறைவடைந்தது. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

09.03.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் வத்தலகுண்டு வட்டார பெண்கள் தின விழா கொண்டாட்டமானது மதியம் 2.00 மணிக்கு கவிராயபுரம் குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் “பெண்கள் முன்னேற்றத்தில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு” என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. குத்துவிளக்கேற்றி, இறைவணக்கப் பாடலுடன் விழா தொடங்கப்பட்டது. திருமிகு.பாக்கியலட்சுமி வரவேற்புரை வழங்கினார். திருமிகு.சரண்யா, வழக்கறிஞர் பெண்களின் உரிமைகள் பற்றியும், அதற்கான சட்டங்கள் பற்றியும் இலவச சட்ட மையத்தை பற்றியும் விளக்கமளித்தார். அருட்தந்தை.இஞ்ஞாசி அற்புதராஜ் அவர்கள் குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் பெண்கள் நேரமேலாண்மை மற்றும் பொருளாதார மேலாண்மையில் சிறந்து விளங்கி குடும்ப முன்னேற்றத்தை வலுப்படுத்த வாழ்த்தினார். திருமிகு.அருள் தன மேரி, அவர்கள் புற்றுநோய் பற்றியும், புற்றுநோய் வருவதற்கான காரணங்கள், சுயபரிசோதனை செய்யும் முறை, சத்தான ஊட்டச்சத்துடைய உணவு முறைகளை பற்றியும் ஆலோசனை கூறினார். அருட்தந்தை.இராஜன், துணை செயலர் வாசகர் கூட்டம் பற்றி கூறினார். அருட்தந்தை.ஸ்டாலின் நடனமாடிய பெண்களுக்கு பரிசு வழங்கினார். புனித ஜார்ஜ் தையல் பயிற்சியை பெற்ற திருமிகு.ஜெஸி தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

10.03.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் கொடைக்கானல் வட்டார பெண்கள் தின விழா கொண்டாட்டமானது காலை 11:30 மணிக்கு கொடைக்கானல் வட்டார அலுவலகத்தில் “தொழில்நுட்பத்தை சாதகமாக பயன்படுத்துவோம்” என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. குத்துவிளக்கேற்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, மற்றும் வரவேற்பு நடனத்துடன் விழா தொடங்கப்பட்டது. திருமிகு.சசிகலா வரவேற்புரை வழங்கினார். திருமதி.ரேணுகா தேவி, சமூக நலத்துறை அலுவலர் பெண்களுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். திருமிகு.பரிமளம், வழக்கறிஞர் பெண்களுக்கான இலவச சட்டம் பற்றியும் சட்டத்தின் சலுகைகளை பற்றியும் ஆலோசனை வழங்கினார். Dr.கீர்த்தி பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பற்றியும் அதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் முறைகளைப் பற்றியும் ஆலோசனை வழங்கினார். திருமிகு.ஸ்டெல்லா, ஆசிரியர் பெண்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவர்கள் என்பது குறித்தும் சிறப்புரையாற்றினார். திருமதி.சுமதி, காவல்துறை ஆய்வாளர் பெண்கள் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் நடந்து கொள்ளும் விதம் குறித்து விளக்கமளித்தார். சுயஉதவிக்குழு பெண்கள் ஊடகங்களை சாதகமாக்குவோம் என்ற தலைப்பில் நாடகம் நடித்தனர். பசுமை கூட்டமைப்பு குழந்தைகள் நடனம் ஆடினார்கள். திருமிகு.லொரைட்டா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நன்றி கூற விழா நிறைவடைந்தது. குழு உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

11.03.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் தேனி வட்டார பெண்கள் விழா கொண்டாட்டமானது காலை 11.00 மணிக்கு சின்னமனூர் கத்தோலிக்க மகா சபை சமுதாயக்கூடத்தில் 287 பங்கேற்பாளர்களுடன் கொண்டாடப்பட்டது. திருமதி.ஜெயஜோதி அவர்களின் வரவேற்புரையுடன் விழாவானது தொடங்கப்பட்டது. டாக்டர்.ப்ரீத்தி நிலா பெண் அடிமை விலங்கொடிப்போம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். திருமிகு.லட்சுமி விசாகன் அவர்கள் பெண்களுக்குள் இருக்கும் சக்திகளையும் திறன்களையும் ரசித்துப் பாருங்கள் அப்பொழுது பெண்ணுக்கு மட்டும் விடுதலை இல்லை நம் மண்ணுக்கும் தான் விடுதலை என்று பெண்ணின் பெருமையை பேசினார். சின்னமனூர் பங்குதந்தை அருள்பணி.எடிதர்மானந்து அவர்கள் சமுதாய மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பும் வலுச்சேர்க்க கூடியதாய் இருப்பதைக் கண்டு வாழ்த்தினார். திருமிகு.மகேஸ்வரி பெண்களுக்கான நல உதவி திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார். அருட்சகோதரி.சாந்தாமேரி ஜோசிட்டா, பெண்களின் கல்வி முக்கியத்துவம் பற்றியும் முன்னேற்றம் பற்றியும் கருத்துரை வழங்கினார். அருட்தந்தை.இராஜன், உதவி செயலர் வாசகர் வட்டம் உருவாக உள்ளது பற்றி எடுத்துக்கூறினார். கும்மி நடனம், விழிப்புணர்வு பாடல் விழாவிற்கு வண்ணம் சேர்த்தது. திருமதி.பிரியங்கா அவர்களின் நன்றியுரையோடு விழாவானது நிறைவடைந்தது. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

14.03.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் திருவில்லிபுத்தூர் பெண்கள் தின விழா கொண்டாட்டமானது “பெண் விடுதலையில் இன்றைய தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் திருவில்லிபுத்தூர் ஜீவன் ஊரக சமுதாய கல்லூரி ICM கான்வென்ட் வளாகத்தில் காலை 11.00 மணிக்கு கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 70 மகளிர் கலந்து கொண்டனர். னுசு.மேரி ஜெனோவா, பெண்களின் சுகாதார நிலை மற்றும் பெண் கல்வியை பற்றி கருத்துரை வழங்கினார். திருமிகு.ஜெஸ்சி ஏஞ்சலின், சமூக ஆர்வலர் பெண்கள் சமூகத்தில் செய்து கொண்டிருக்கும் சமூக பணி பற்றியும், சமுதாயத்தில் பெண்களின் நிலை பற்றியும் கருத்துரை வழங்கினார். திருமிகு.ரேணுகா தேவி, மாதர் சங்கத் தலைவி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை பற்றியும், அதனை தடுப்பதற்கு பெண்கள் தைரியம் உள்ளவர்களாக துணிச்சலோடு இருக்க வேண்டும் என்பது குறித்தும் கருத்துரை கூறினார். திருமிகு.சகாய ஜெனி, தலைமை ஆசிரியர் பெண்களின் இக்கால கல்வி முறை பற்றியும், அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குவது பற்றியும் பெண் கல்வி பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். மகளிர் குழு பெண்கள் கோலாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், வால்வீச்சு, கரகம், ஒயிலாட்டம் ஆடி மகிழ்வித்தனர். அருட்தந்தை.இராஜன் அவர்கள் குழந்தைகளை ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இருவரையும் சமமாக வளர்க்க வேண்டும் என்று வாழ்த்துரை கூறினார். அருட்சகோதரி பிரான்சிஸ்கா அவர்களின் வாழ்த்துரையோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

15.03.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் சார்பாக மகளிர் தின விழா சங்க அலுவலக வளாகத்தில் “வீரப் பெண்ணாய் விடுதலை நோக்கிய பயணத்தில்” என்ற கருப்பொருளில் சங்கத்தின் துணைத் தலைவர் பேரருள்தந்தை ஜெரோம் எரோணிமுஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் பங்கேற்பில், புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியுடன் தொடங்கியது. மதுரை மாநகராட்சியின் உள்ளாட்சி மன்ற பிரதிநிதி திருமிகு.சரஸ்வதி அம்மாள் அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பெண்களின் உடல் நலமும் மனநலமும் என்ற கருப்பொருளில் மகளிர் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் V.R.ஜமுனாராணி அவர்களும், பொதுவுடமையும் பாலின சமத்துவமும் என்ற கருப்பொருளில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் தொ.ஆரோக்கிய மேரி அவர்களும், இந்திய அரசியலமைப்பு காட்டும் பாலின சமத்துவம் என்ற கருப்பொருளில் மதுரை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் திருமிகு.ஜெஸிமத்துல் பாத்திமா அவர்களும் கருத்துரை வழங்கினர். பெண்களும் புதிய தொழில்நுட்பமும் என்ற கருப்பொருளில் ஆவணப்பட இயக்குனர் தோழர் திவ்யா பாரதி அவர்களும், பெண் விடுதலையின் மையக்கரு கல்வியே என்ற கருப்பொருளில் அமலவை மாநில தலைவி அருள்சகோதரி டெய்சி அவர்களும் சிறப்புரையாற்றினர். மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் துணைத் தலைவரும் முதன்மை குருவுமான பேரருள்தந்தை ஜெரோம் எரோணிமுஸ் அவர்கள் தலைமை உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை உயர்மறை மாவட்ட பொருளர் அருள்தந்தை அல்வாரஸ் செபாஸ்டின் அவர்கள், அருள்தந்தை பாரிவளன், அருள்தந்தை தேவா, அருள்தந்தை வினோத் மத்தியாஸ் ஆகியோர் பங்கேற்றனர். பண்பாட்டு கலை நிகழ்வுகள் நிகழ்ச்சிக்கு வளம் சேர்த்தது.