17.07.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் வத்தலகுண்டு அருள்நகர் அலுவலகத்தில்
மதியம் 12.00 மணிக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சங்க செயலர்
அருட்பணி கபிரியேல் தலைமை தாங்கினார். விழாவில் சங்க செயலர், துணைச்செயலர்கள், மாஸ்
தொண்டு நிறுவனம் திருமிகு.வனிதா, தையல் பயின்றோர் பங்கேற்றனர். வட்டார ஒருங்கிணைப்பாளர்
திருமிகு.பாக்கியலட்சுமி வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். திருமிகு.வனிதா தனது
கருத்துரையில் தையல் கற்றுக்கொள்வதற்கு படிப்பு தேவையில்லை ஆர்வம் இருந்தால் போதும்,
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொண்டால் நம் வீட்டிலிருந்து சம்பாதிக்கலாம் என்று கூறினார். தையல்
பயிற்சி சான்றிதழ் வைத்து தையல் ஆசிரியராக வேலைக்கு போகலாம் எனவும், தையல் மெஷின் வாங்க
மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்து மிஷின் வாங்க வாய்ப்புள்ளது என்பதை பற்றியும் எடுத்துக்
கூறினார். செயலர் தந்தை தனது தலைமை உரையில் இங்கு தையல் பயிற்சி பயின்ற அனைவரும்
தொழிலதிபராக வளர வேண்டும் என்றும் வாழ்த்துக் கூறினார். கற்றுக்கொண்ட ஒவ்வொரு நபரின்
அனுபவம் பற்றி கேட்டறிந்தார். திருமிகு.சங்கீதா தனது அனுபவம் பற்றி பகிர்ந்துக்கொண்டார். தையல்
பயிற்சி மாணவிகள் நடனமாடி மகிழ்வித்தனர். தையல் பயிற்சிக்கு தொடர்ந்துவந்த மாணவி
திரு.ஜெயலட்சுமிக்கு செயலர் தந்தை பரிசு வழங்கினார். 24 நபருக்கு தையல் பயிற்சி சான்றிதழ்
வழங்கினார். பணியாளர் திருமிகு.ஆசை பொண்ணு நன்றிகூற விழா இனிதே நிறைவு பெற்றது.