தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழாவும் பேரிடர் உதவி வழங்கும் நிகழ்வும்

16.07.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் அருப்புக்கோட்டை வட்டார அலுவலகத்தில் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழாவும் பேரிடர் உதவி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. விழாவில் சங்க செயலர், உதவி செயலர்கள், அருப்புக்கோட்டை பங்குத்தந்தை எடிசன், தையல் பயின்றோர், பேரிடர் உதவி கோரியவர்கள் பங்கேற்றனர். தையல் பயின்றோர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, தங்களின் அனுபவங்கள் பற்றியும் தாங்கள் பயின்ற தையல் பயிற்சி அவர்களுக்கு பயனுள்ள வகையில் இருப்பது பற்றியும் பகிர்ந்து கொண்டனர். பயிற்றுவித்த தையல் ஆசிரியர் பொறுமையுடன் அனைத்தையும் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி கூறினர். செயலர் தந்தை தனது உரையில் “கைத்தொழில் ஒன்றினை கற்றுக்கொள் கவலை என்பது உனக்கில்லை ஒத்துக்கொள்” என்பது போல் அனைவரும் கைத்தொழில் கற்க வேண்டும் என்று கூறினார். உதவி செயலர் அருட்பணி ராஜன் கடந்த மாதம் அருப்புக்கோட்டை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பொழிந்ததில் சத்தியவாணி முத்து காலனி பகுதியில் ஐந்து வீடுகள் சேதம் அடைந்தது பற்றியும் சங்கத்தால் முடிந்த அளவு நிதி உதவி வழங்குகிறோம் என்று கூறினார். செயலர் தந்தையும், பங்குதந்தை எடிசன் அவர்களும் இணைந்து உதவியை வழங்க நன்றி நிறைந்த உள்ளத்தோடு பயனாளர்கள் உதவி பெற்றுச் சென்றனர்.