மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம்

25.09.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் வத்தலகுண்டு வட்டார அலுவலகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம் காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமிகு பாக்கியலட்சுமி வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். மாஸ் நிறுவனம் திருமிகு தமிழ்செல்வி மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் பெண்களுக்கு அதிகம் பரவுகிறது என்றும், பெண்கள் சுய பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம் எனவும், அதற்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார். மாவட்ட அலுவலர் திருமிகு பாண்டியராஜ் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தப்படும் திட்டத்தின் வழியாக சிறுதொழில் செய்ய வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும், திட்டத்தில் பயன்பெற தேவையான ஆவணங்கள் பற்றியும் விளக்கினார். அருட்சகோதரர்கள் தையல் பயிற்சி மாணவிகளிடம் இவர்களும் குழுவாக இணைந்து செயல்பாட ஆலோசனை கூறி அதனைப் பற்றி கலந்துரையாடினர். திருமிகு.ரோஸி சுயமாக வருமானம் ஈட்டும் அளவிற்கு தையல் பயிற்சி பயனுள்ள வகையில் அமைந்ததன் பற்றி தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். திருமிகு.நாகலட்சுமி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.