அருப்புக்கோட்டை மூன்றடைப்பில் உள்ள செயின்ட் மேரீஸ் பண்ணையில் மரம் நடுவிழா

19.06.2023 அன்று காலை 11:30 மணிக்கு மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் சார்பாக அருப்புக்கோட்டை மூன்றடைப்பில் உள்ள செயின்ட் மேரீஸ் பண்ணையில் செயலர் தந்தை தலைமையில் துணைச்செயலர்கள் முன்னிலையில் அகில உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு மரம் நடுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் அருப்புக்கோட்டை வேளாண் ஆலோசகர் திருமிகு.சந்திரசேகர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் திருமிகு.உமா மகேஸ்வரன், சைல்ட் லைன் (Child Line) திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.குருசாமி ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். திருமிகு.பொருட்செல்வி வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். செயலர் தந்தை கபிரியேல் விழாவின் நோக்கம் குறித்தும் மரத்தின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர் திருமிகு.சந்திரசேகர் மரம் நடும் முறைகள் பற்றியும், மரம் வளர்வதற்குப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். திருமிகு.உமா மகேஸ்வரன் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் எடுத்துரைத்தார். இவ்விழாவில் மைய அலுவலகப் பணியாளர்கள், அருப்புக்கோட்டை வட்டாரப் பணியாளர்கள், அருப்புகோட்டை மற்றும் தொட்டியாங்குளம் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அனைவரும் மரக்கன்றுகளை நட்டனர். 250 மரக்கன்றுகள் செயின்ட் மேரீஸ் பண்ணையில் நடப்பட்டது