மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் சுதந்திர தின விழா

15.08.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் விருதுநகர் வரவேற்பு மையத்தில் காலை 9.00 மணிக்கு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழா சங்கத் துணைச் செயலர் அருட்பணி ராஜன் தலைமையில் நடைபெற்றது. இல்ல சிறுவர் சிறுமியர்கள் தோரணங்கள் கட்டி கோலங்கள் இட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். இல்ல குழந்தைகள் எலுமிச்சை கன்று கொடுத்து உதவி செயலர் தந்தையை வரவேற்றனர். இல்ல தோட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அருட்பணி ராஜன் தேசிய கொடியை ஏற்றினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. சிறுவர் சிறுமிகள் ஆடல்> பாடல் மற்றும் சுதந்திர தின நன்னாளின் சிறப்பு குறித்து உரையாற்றினர். அருட்பணி ராஜன் சுதந்திர jpd நாளின் கருத்துக்களை குறித்து சிறப்புரை வழங்கினார். திருமிகு பாத்திமா நிகழ்வினை தொகுத்து வழங்கினார். திருமதி சுஜாதா மற்றும் இல்ல பணியாளர்கள் இணைந்து விழாவினை ஒருங்கிணைத்தனர். இல்ல கண்காணிப்பாளர் திருமிகு ஜஸ்bன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

21.08.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் வத்தலகுண்டு வட்டாரத்தில் மூத்தோர் தின விழா சிலுக்குவார்பட்டி ஆர்.சி. பள்ளியில் காலை 11.00 மணிக்கு பள்ளித் துணை தலைமை ஆசிரியர் திரு.ஜெயசீலன் தலைமையில் கொண்டாடப்பட்டது. திருமிகு பாக்கியலட்சுமி வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். திருமிகு.வனிதா முதியோர் மனநிலை, வயது ஆகியவற்றைப் பற்றியும், அவர்களை மரியாதை கொடுத்து அன்பாக நடத்த வேண்டும் என்றும் கூறினார். திருமிகு.மேரி நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

23.08.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உலக அளவிலான சிறுதானிய தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழாவானது தொடங்கப்பட்டது. ஒவ்வொரு குழுக்களும் சிறுதானிய உணவு வகைகளை செய்து அதனை மக்களின் பார்வைக்கு வைத்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தின் நோக்கம் பற்றியும், மாற்று உணவு பயன்படுத்துவது பற்றியும், சிறுதானியத்தின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தனர். சமுதாயம் சார்ந்த சுய உதவி குழுக்களின் பயிற்றுநர் திருமிகு.உஷா சிறுதானியங்கள் மூலம் ஏற்படும் நன்மைகள் பற்றியும், உணவு வகைகள் பற்றியும் கருத்துக்களை வழங்கினார். கருப்பசாமி மகளிர் குழு தலைவி திருமிகு.திருமலர் குழுக்கள் தயார் செய்து வைத்திருந்த உணவுகளின் மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள் குறித்து விளக்கினார். குழு தலைவிகள் தாங்கள் செய்து வந்த சிறுதானிய உணவுகளை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பகிர்ந்தனர் . வட்டார பணியாளர் திருமதி.ஞானம் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

25.08.2023 அன்று மதுரை பல்நோக்கு சமூக சேவா சங்கத்தின் கொடைக்கானல் வட்டாரத்தில் உலகப் புற்றுநோய் எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 79 சுய உதவிக் குழு பொறுப்பாளர்கள், பெண்கள், அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். திருமதி.தவமணி வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். அரசு மருத்துவர் டாக்டர் நந்தினி புற்றுநோயின் வகைகள், பாதிப்பு, ஏற்படும் விளைவுகள் பற்றியும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார். அப்பலோ மருத்துவமனை மருந்தக மேலாளர் திருமிகு.சுகெய் மேஷாக் பெண்களின் மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனை பற்றியும், மனதிற்கும் உடலுக்குமான உறவு பற்றியும், உடல் தூய்மை மற்றும் சுத்தமான உணவு முறைகள் பற்றியும் விளக்கமளித்தார். பாசம் அறக்கட்டளை செவிலியர்கள் 25 பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை செய்தனர். திருமிகு.சரவணகுமார் 32 நபர்களுக்கு தைராய்டு, பிபி, சுகர், ரத்த பரிசோதனை செய்தார்கள். திருமிகு.சசிகலா நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.